நான் தாத்தாவுடனும், லட்டுவுடனும் ஒட்டிக் கொண்டு நின்றேன். புஷ்பாவும், பாரதியும் அந்த நிமிடம் வரை சிநேக பாவத்துடன்தான் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், இனி அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று என்னால் சிறிதளவு கூட ஊகிக்க முடியவில்லை.
“வேறு யார் உங்களுடன் பூமிக்கு வந்தனர்?” என்று தாத்தா அவர்கள் இருவரிடமும் கேட்டார்.
“நவீன பூமியைப் பார்க்க விரும்பிய இரண்டு டைனாசரஸ், ஒரு சீன யானை, ஒரு குவாகா” என்று பாரதி நினைவுபடுத்தினார்.
“கரப்பானைப் பற்றி சொல்ல மறந்து விட்டாயே!” என்றாள் புஷ்பா.
“ஆமாம்! பல யுகங்களாக பூமியில் அழியாமல் வாழும் இனமே கரப்பான் பூச்சிகளின் இனம்தான்! அதனால்தான் கரப்பானுக்குப் பூமி மீதுள்ள பற்று இன்னும் குறையவில்லை” என்றார் பாரதி.
“குவாகா என்றால் யார்?” என்று நான் கேட்டேன். அது “கொய்யா” பழத்தை எனக்கு நினைவு படுத்தியது. அந்தப் பெயரில் உள்ள விநோதமான மிருகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
“குவாகா என்பது வரிக்குதிரை போலவே தோற்றமளிக்கும் ஒரு பிராணி” என்றார் பாரதி.
“இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே!” என்ற புஷ்பா “தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தவள் என்பதால் அவளை வரிக்குதிரை என்று அனைவரும் நினைக்கின்றனர். தன்னை வரிக்குதிரை என்று யாராவது குறிப்பிட்டால் அவளுக்குப் பிடிப்பது இல்லை” என்றாள் புஷ்பா.
“ஆமாம்! நீ சொல்வது சரி! அழுதாலும் அழுது விடுவாள்” என்றார் பாரதி. |
|
|